மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகளில் துத்திக் கீரை மிகவும் முக்கியமானது. ஜீரண மண்டலம் தொடக்கம் முதல் இறுதி வரை உடலில் ஏற்படும் மாற்றங்களை நல்ல முறையாக செயல்பட்டு பராமரிக்க துத்திக் கீரை பயன்படுத்தப்படுகிறது. மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி கீரையை உணவாக எடுத்து வந்தால் இந்த நோய்களிலிருந்து குணமடையலாம்.
மருந்தாகும் துத்தி கீரை
துத்திக் கீரையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சைடு கெமிக்கல்ஸ் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் உடலுக்கு தேவையான நல்ல ஆற்றல்களை அதிகரிக்கும். பலவிதமான நோய்கள் வராமல் நம் உடலை பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
மூலநோய் தீர
ஐந்து துத்தி இலை கீரைகளை விழுதாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு வார காலம் குடித்து வந்தால் நோயிலிருந்து விடுபடலாம்.
துத்திக் கீரை கசாயம்
ஐந்து துத்தி இலை கீரைகளை இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனபின் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாத காலம் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
பல்வேறு வலி உள்ளவர்கள் இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் நோய் அறிகுறிகள் போய்விடும். நாள்பட்ட புண்கள் சீக்கிரமாக குணமாகும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயிலிருந்து விடுபடுவார்கள். ஆண்களின் ஆண்மை தன்மை அதிகரிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளுக்கு ஊட்டச்சத்து அழைத்து உடல் ஆரோக்கியம் பெருகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உடல் சுறுசுறுப்பாக காணப்படும். பக்கவாத நோய் உள்ளவர்களுக்கு துத்திக் கீரை சிறந்த உணவாகும். நோய் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறுவார்கள்.
துத்திக் கீரை உணவு
துத்திக் கீரை சிருங்க கசப்பாக இருக்கும் இதனால் இதை சமைக்கும் பொழுது சிறிதளவு பச்சைப் பருப்பு சேர்த்து சமைத்து கூட்டு போல் தயார் பண்ணி சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
