இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் கயா என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள மகா போதி மையமாகக் கொண்டது புத்தகயா. தொடர்புடைய யாத்திரை தளங்களில் இது முதன்மையானது. இந்தக் கோவில் நிரஞ்சனா ஆறு என்று அழைக்கப்படும் பல்கு நதி கரையில் அமைந்துள்ளது. எங்கிருக்கும் போதி மரத்தடியில் புத்தர் தவம் புரிந்து ஞானத்தை பெற்றதால் உலகில் உள்ள அனைத்து புத்த மத மக்களுக்கு புனிதமான கோவில் ஆகும்.
இந்தியாவிலேயே இங்கிருக்கும் மகா போதி கோவில் மிக பழமையான இந்திய கோவில்களில் ஒன்று. இக்கோவில் இந்துக்களும் மற்றும் பௌத்தர்கள் இருவருக்கும் புனித தளமாக விளங்குகிறது. 2002ல் புத்தகயாவில் அமைந்துள்ள மகா போதி கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற உலக நாடுகளை சார்ந்த புத்தர் கோவிலும் இங்குள்ளது அவை டிபேட் மங்கோலியா நேபாளம் கம்போடியா ஜப்பான் மியான்மர் கொரியா லாவோஸ் வியட்நாம் இலங்கை சிக்கிம் தைவான் தாய்லாந்து பூட்டான் மற்றும் சைனா ஆகும். இந்தக் கோவிலும் மடங்களும் மகா போதி கோவிலை சுற்றி உள்ளது. 150 அடி உயரம் வாய்ந்த மகா போதி கோவில் கோபுரம் 60 அடி அகலமும் கொண்ட செங்கல்லால் கட்டப்பட்ட கோவில். இந்தக் கோவிலின் கோபுரம் பிரமிடு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் கருவறையில் இருக்கும் புத்தர் தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இங்கு 80 அடி உயரத்தில் புத்தர் சிலை உள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கும்.உலகில் எங்கும் காண முடியாத மிகவும் பிரம்மாண்டமான கோவில் மணி எங்கு புத்தகயாவில் காணப்படுகிறது. நம் பிரார்த்தனை நிறைவேற இந்த மணியை அடித்து பிரார்த்திக்கலாம்
கயா விமான நிலையத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் மகா போதி கோவில் அமைந்துள்ளது. கயா சந்திப்பு ரயில் நிலையம் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோ, பஸ் வசதிகள் உண்டு. மிகவும் அமைதியாகவும் ரம்யமாகவும் இயற்கை விரும்பிகள் கண்டிப்பாக புத்தகையாவை அனுபவிக்கலாம்.
