தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் அடைந்த எதிர்பாராத தோல்வி குறித்து, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய துர்கா ஸ்டாலின் தனது பழைய தொடர்புகள், திமுக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களிடம் தனித்தனியாகப் பேசி விபரங்களைச் சேகரித்துள்ளார்.
அப்போது, தொகுதிப் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் ஸ்டாலின் இல்லத்திற்கு அனுப்பிய கடிதங்கள் பல படிக்கப்படாமலே குப்பையில் வீசப்பட்டதாகவும், ஐந்து ஆண்டுகளாகத் தொகுதி மக்களைக் காட்டாமல் வெளியூர்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து கட்சி கூட்டங்களில் காட்டி நிர்வாகிகள் ஸ்டாலினை ஏமாற்றியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் நடந்தது போன்ற தீவிர தேர்தல் பணிகள் கொளத்தூரில் நடக்கவில்லை என்பதும், உண்மையுடன் உழைத்த நிர்வாகிகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதைச் சரியாகக் கவனிக்காமல், அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சை நம்பி ஸ்டாலினை மீண்டும் அங்கேயே போட்டியிட வைத்ததுதான் இந்தத் தோல்விக்கு முதன்மையான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

