இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) இன்று “பாஸ் ஸ்கேம்” (Boss Scam) அல்லது சிஇஓ (CEO) ஆள்மாறாட்ட மோசடி என்று அழைக்கப்படும் புதிய சைபர் குற்றப் போக்கு குறித்து முக்கிய எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மோசடியில் சைபர் குற்றவாளிகள் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளைக் குறிவைத்து, அவசர ஒழுங்குமுறை இணக்கம் (Regulatory Compliance) என்ற பெயரில் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) வழியாகப் தீம்பொருள் (Malware) அடங்கிய கோப்புகளை அனுப்பி வைக்கின்றனர்.
உயர் அதிகாரிகள் அதைத் திறக்கும்போது, அந்தத் தீம்பொருள் அவர்களின் விண்டோஸ் கணினி மற்றும் செயல்பாட்டில் உள்ள வெப் வாட்ஸ்அப் (Web WhatsApp) கணக்குகளை முற்றிலும் முடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது.
இதன் மூலம், அந்த அதிகாரியின் கணக்கைப் பயன்படுத்தியே கீழ்நிலை ஊழியர்களுக்கு அவசரச் செய்திகளை அனுப்பி, பெரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் பணப் பரிமாற்றங்களைச் செய்ய மோசடிக்காரர்கள் வழிவகை செய்துகொள்கிறார்கள் என்பதால் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
