Home Uncategorized இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்

சர்வதேச அளவில் நம் தமிழ்த் திரை இசையை  கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை தனது கைகளில் ஏந்தி, உலக அரங்கில் ஒவ்வொரு தமிழர்களை தலை நிமிரச் செய்திட்ட ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று.

1966 ஆம் ஆண்டு பிறந்த ஏ.ஆர்.ரஹ்மான், அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.. அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.

Exit mobile version