பல்வேறு சமூக வலைதளங்களில் அமைச்சர் ராஜ்மோகனின் சொத்து விவரங்கள் குறித்துக் கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு அவர் தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளார். தான் மேடையில் பேசியது நூறு சதவீதம் உண்மை என்று தெரிவித்துள்ள அவர், தற்போது தான் வசித்து வரும் 600 சதுர அடி கொண்ட சிறிய 1 BHK வீடு வங்கிக் கடனில் (Loan) வாங்கியது என்றும், அதற்கு மாதந்தோறும் சுமார் 25,000 ரூபாய் தவணை (EMI) கட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சிறிய வீட்டில் நான்கு பேர் வசிப்பது கடினம் என்பதால், தனது பெற்றோருக்காகத் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் 15,600 ரூபாய் வாடகை செலுத்தி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த மாதம் வாடகை செலுத்தியதற்கான ஆதாரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
உணர்ச்சிப்பூர்வமாகத் தான் பேசியது தனது பெற்றோருக்கான வாடகை குறித்த கவலையே தவிர, தவறான தகவல் அல்ல என்பதை அமைச்சர் ராஜ்மோகன் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

