Wednesday, March 4, 2026
HomeUncategorizedஇனி மின்தடையே தமிழகத்தில் இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி 

இனி மின்தடையே தமிழகத்தில் இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி 

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் நிர்வாக கோளாறுகளால் மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகள் குறித்த அட்டவனை தயாராகிவருகிறது. தமிழக அரசின் மீது குற்றம் சுமத்த பூதக்கண்ணாடி வைத்து தேடிவருகிறார்கள். மின்தடை ஏற்படுகிறது என பொத்தாம் பொதுவாக குற்றம் செலுத்தாமல் எங்கு மின்தடை ஏற்படுகிறது என்பதை தெரியபடுத்தினால் உடனடியாக சரிசெய்யப்படும். மின்வாரியம் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments