Home Uncategorized இன்று சாண்டோ சின்னப்பா தேவரின் 43வது நினைவு தினம்

இன்று சாண்டோ சின்னப்பா தேவரின் 43வது நினைவு தினம்

கட்டுமஸ்தான உடல். தீவிர சுய கட்டுப்பாடு. மது மாது போன்ற பழக்கங்கள் இல்லை. பொய், அடிதடி போன்ற சர்ச்சைகளில்லை.

வறுமையோடு போராடி முருகனை மனமார நினைத்த பொழுதுதான் அவருக்கு அதிர்ஷ்டம் எம்ஜிஆர் உருவில் வந்தது.

அவரின் சண்டை நுணுக்கமும், முருக பக்தியும், ஒழுக்கமும் எம்ஜிஆரைக் கவர்ந்தன‌. இருவரும் நண்பர்களானார்கள்.

சகோதரன் போலப் பழகினார்கள்.

அப்படிபட்ட எம்ஜிஆர் சின்னப்பா தேவரை சரியாக கணித்தார். தேவரின் முதல் படத்தில் நடிக்க சம்மதித்தார். தேவர் தயாரிப்பாளரானார்.

வெறும் 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னை வந்து, மார்வாடிகளும் செட்டிகளும் லட்சங்களைக் கொட்டும் தொழிலில், சட்டை போடாமல், வேட்டி கட்டிய பாமரனாக முருகன் மேல் பாரத்தைப் போட்டுத் திரைப் படமெடுத்தார் தேவர்.

“தாய்க்கு பின் தாரம்” 1956ல் வந்தது. தேவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. மருதமலை முருகன் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் படிகளில் ஏற்றினான்.

Exit mobile version