அகில உலக அளவில் 31-வது பெரிய நகரமாக உள்ள நமது சென்னை விளங்குகிறது. இத்தகைய நமது சென்னைக்கு இன்று 382-வது பிறந்த நாள்.
ஆங்கிலேயர் ஆட்சியில், 1639-ம் ஆண்டு இதே நாளில்தான் முதன்முறையாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கியது. அதை தொடர்ந்து அதில் இருந்து வணிகம் பெருகி சென்னை மாநகரம் விரிவடைந்தது.
2004-ம் ஆண்டு முதல் சென்னையின் பிறந்தநாள் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக எளிய முறையில் சென்னை தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

