Friday, August 14, 2026
Homeசெய்திகள்சுதந்திர தினம் 2026: தமிழக காவல்துறையின் 15 அலுவலர்களுக்கு முதலமைச்சர் சிறப்புப் பதக்கம்! தலா 8...

சுதந்திர தினம் 2026: தமிழக காவல்துறையின் 15 அலுவலர்களுக்கு முதலமைச்சர் சிறப்புப் பதக்கம்! தலா 8 கிராம் தங்கம், ₹25,000 ரொக்கப் பரிசு!

2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 15 அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்குத் தமிழக முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி சி.ஜெயஸ்ரீ, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி நா.தமிழரசி, கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் திரு கொ.அழகுராஜ், திருச்சி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (CBCID) காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி ந.தனுசியா, கோவை தனி சிறுவர் காவல் உதவிப் பிரிவு ஆய்வாளர் திருமதி சே.லதா, சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக நிர்வாக உதவித் தலைவர் திருமதி வி.கோமதி, பெரம்பலூர் கைக்களத்தூர் ஆய்வாளர் திருமதி மா.சித்ரா, விழுப்புரம் மேல்மலையனூர் ஆய்வாளர் திருமதி ரா.வினோதா, சிவகங்கை மாவட்ட குற்றப் பதிவேட்டு கூட ஆய்வாளர் திருமதி கோ.மகாலட்சுமி, திருநெல்வேலி மேற்கு காவல் துறை ஆணையர் திரு வ.விஜயகுமார் ஆகிய 10 அதிகாரிகளும், பொதுமக்களுக்கான சிறந்த சேவைக்கான பதக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திண்டுக்கல் சரக காவல் துறை துணைத்தலைவர் டாக்டர் வி.சசி மோகன் இ.கா.ப., சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக காவல் கண்காணிப்பாளர் திருமதி தே.சண்முக பிரியா இ.கா.ப., சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் திரு சி.எம்.ஆர்.மணிமொழியன், சென்னை மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை தொழில்நுட்ப ஆய்வாளர் திரு க.மதன் மோகன், கரூர் நகர காவல் நிலைய தலைமை காவலர் திரு மு.ரவிக்குமார் ஆகிய 5 அதிகாரிகளும் என மொத்தம் 15 அலுவலர்களுக்குத் தலா 8 கிராம் தங்கப் பதக்கமும் ரூ.25,000 ரொக்கப் பரிசும் பிறிதொரு விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படவுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments