Wednesday, February 4, 2026
Homeவணிகம்பங்குச்சந்தை சரிவு!

பங்குச்சந்தை சரிவு!

 விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் நடந்தது. முன்னதாக இந்தியா மீதான 50% இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா உறுதி செய்தது. இதனால் பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. இதன் பாதிப்பு நேற்றும் எதிரொலித்து சரிவுடன் வர்த்தகமாகி, சரிவிலேயே முடிந்தன.

 மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் “சென்செக்ஸ்” 705.97 புள்ளிகள் அதாவது 0.87 சதவீதம் விழுந்து 80,080 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் “நிப்டி” 216 புள்ளிகள் அதாவது 0.85 சதவீதம் சரிந்து 24,500 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. பங்குச்சந்தை தொடர்வீழ்ச்சியால் இந்திய முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments