Wednesday, June 24, 2026
Homeசெய்திகள்பெண் பயணிகளுக்கு இந்திய ரயில்வே சூப்பர் வசதி.. 175 நிலையங்களில் இலவச சானிட்டரி நெப்கின் இயந்திரங்கள்!

பெண் பயணிகளுக்கு இந்திய ரயில்வே சூப்பர் வசதி.. 175 நிலையங்களில் இலவச சானிட்டரி நெப்கின் இயந்திரங்கள்!

இந்திய ரயில்வே பயணிகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், வட இந்தியப் பகுதியில் உள்ள 175 முக்கிய ரயில் நிலையங்களில் சுமார் 500 இலவச சானிட்டரி நெப்கின் வழங்கும் இயந்திரங்களை (Sanitary napkin vending machines) நிறுவி மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் மாதவிடாய் கால சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உன்னதத் திட்டத்தின் மூலம், ரயில் நிலையங்களுக்கு வரும் பெண்கள் எவ்வித கட்டணமும் இன்றி அவசரக் காலங்களில் சானிட்டரி நெப்கின்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு இந்த வசதி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளதோடு, இந்திய ரயில்வேயின் இத்தகைய சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கை பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண் பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments