”விளையாட்டு” – இது இளம் சமுதாயத்தினரிடையே பேதங்களைக்கடந்து நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடியது. ஆனால், இப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இளைஞர் சமுதாயத்தினரிடையே “நல்லிணக்க மனப்பான்மையை” சிதைத்து வருகிறது. மேலும் விரும்பத்தகாத விளைவுகளை விரைவில் தோற்றுவிக்குமோ? என்னும் அச்சம் உண்டாகிறது.
பொதுவாகவே திரைப்பட நடிகர் நடிகையர் மீதான அதீதமான மோகம், குடி கெடுக்கும் தொலைக்காட்சி தொடர்கள், அவை சார்ந்த சிறப்பு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் போட்டி, சிறந்த நடனஜோடிகள் யார்? என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அனைத்து தரப்பு மக்களையும் பாலின பேதமின்றி, மூளைச்சலவை செய்து அவர்களின் சுயச்சிந்தனையை சூனியமாக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றிகொண்டுள்ளன. அந்த வரிசையில் சேர்த்துக்கொல்ளப்பட வேண்டியது “ஐபில் கிரிக்கெட்” என்றால் மிகையில்லை.
ஒரு உதாரனத்திற்காக சொல்கிறேன். சமீபத்தில் தோனி – விராட் கோலி போறோருக்கான துதிபாடல்களைத்தாண்டி, சிஎஸ்கே- ஆர்.சிபி அணிகளுக்கு, ஏதோ இருநாட்டு இராணுவப்படைகள் மோதிக்கொள்வதைப் போல் ”பில்டப்” தரப்பட, இருதரப்பு ரசிகர்களும் தங்களுக்குள் சிறு சிறு விஷயத்திற்கும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் திட்டித்தீர்த்து வந்தனர்.
இதன் அடுத்தகட்டமாக தங்களிடம் சிஎஸ்கே தோற்றபோது, ஆர்சிபி அணி ரசிகர்கள் ஸ்டேடியத்திலேயே சிஎஸ்கே ரசிகர்களைக் கீழ்த்தரமாக ”ட்ரோல்” செய்தனர். பதிலுக்கு ஆர்.ஆர் அணியிடம் ஆர்சிபி தோற்றதும் சிஎஸ்கே அணி ரசிகர்கள் வச்சி செய்கின்றனர்.
சரி… இது ஏதோ மோகம் என்று வைத்துக்கொண்டாலும், அவர்கள் “ட்ரோல்” செய்ய மையப்படுத்தும் கருப்பொருள்தான் நமக்கு அச்சமூட்டுகிறது.
தங்கள் மோதலுக்கிடையில்”தமிழக வீரர்கள் எவருமே சிஎஸ்கே அணியில் இல்லை” என, அவர்களும், “இங்கிருந்து கரண்ட் வராது” என இவர்களும் கூற, பதிலுக்கு அவர்கள், “காவிரி நீர் பிரச்சினையை” எழுப்ப, ஒரே அதகளம்தான்.
ஆர்சிபி அணியின் பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் “கோப்பை” வென்றதைச் சுட்டிக்காட்டி பெண்கள் செய்ததை ஆண்கள் சாதிக்க முடியவில்லை என “ட்ரோல்” வேறு. இதன் மூலம் ஆண்களைக் கேவலப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, பெண்களை கேவல்;அப்படுத்துகிறார்கள். 21 – ஆம் நூற்றாண்டில் இத்தகைய மனோபாவம் கேவலமாகத்தெரியவில்லையா?
இன்னும் என்னவெல்லாமோ பேசி மோதி வருகிறார்கள்.
இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுமட்டும் மெல்ல மெல்ல விளங்கத்தொடங்குகிறது. அதாவது, ரசிகர்கள் என்கிற போர்வையில், சமூக விரோதிகள், தேசதுரோகிகள் இதன் பின்னணியில் இயங்குகின்றனவோ என்கிற அச்சம் மேலிடுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் ”ஜல்லிக்கட்டு”க்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது, இதேபோல் தான் மெல்ல மெல்ல குரலை உயர்த்தி, முந்தைய காஷ்மீர் கலவரம்போல தூண்டிவிட்டு, மாநிலப் பிரிவினைக்கு தூபம் போட்டனர்.
”ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சியின் மூலம் கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சி என நான் ஏற்கனவே எழுதினேன். போதப்பொருள் விஷ்யத்தில் தமிழக புள்ளிகள் சிக்கியது முதல், “ஹேப்பி ஸ்ட்ரீட்” காணாமல் போயிற்று.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கூட சதிவலையில் சிக்கியிருப்பதாக உணரமுடிகிறது. ஏனெனில் எல்லாவற்றிற்கும் உச்சமாக சென்னையில் “பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா” கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக கூலிக்கு ஆள் அமர்த்தி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தை நிரப்பினர் என அறிந்தோம். அன்றையதினம் நம் பாரதத்தின் தேசியக்கொடி மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒரு காவல் அதிகாரியே நம் தேசியக்கொடியை பிடுங்கி, தூக்கி விசிய காணொலி வைரலானது. தமிழக அரசை இதற்காகவே மன்னிப்புக்கேட்க வைத்திருக்க வேண்டும். ஆனால், அதை எளிதாக கடந்து போனோம்.
இப்படி தொடர்ச்சியாக மக்களை மூளச்சலவை செய்து, குறிப்பாக இளைஞர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு ஆளாக்கி, அதன் மூலம் ஜனநாயகத்திற்கெதிரான வேலை நடக்கிறது என்பது திண்னம்.
இக்கட்டுரையை எழுதும்நேரத்தில் பார்க்க நேர்ந்த வேறு ஒரு காணொலி மேலும் அச்சமூட்டுகிறது. அதாவது இந்தியாவில் செயல்பட்டுவரும் பன்னாட்டு நிறுவனங்களின் ஐடி கம்பெனிகளில் மெத்தப்படித்த, உயர் பதவிகளில் பணிபுரியும் 350 இந்தியப் பெண்களை இந்திய பாதுகாப்பு சம்பந்தமான அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக அறிகிறேன்.
ஓய்வு பெற்ற இந்திய இராணுவ மேஜர் ஒருவர், இந்த செய்தியை பகிரங்கப்படுத்தியுள்ளார். அந்த பெண்களின் பின்னணியில் ஆப்கனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழு இயங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”கூட்டிக்கழிச்சிப்பாருங்க. கணக்கெல்லாம் சரியா வரும்.”
மத்திய, மாநில அரசுகள் ஒரு வரையறை ஏற்படுத்த வேண்டும். தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஐபிஎல்- ஐ தடை செய்யவும் தயங்கக்கூடாது.
இதன் பின்னராவது நாம் எத்தகைய ஆபத்தான சூழலில் உள்ளோம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இளைய சமூகம் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். அது விபரீதங்களுக்கு விதை தூவும் வினையாக மாறிவிடக் கூடாது.
