Home Uncategorized இறந்து போன பெண் காவலருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர்

இறந்து போன பெண் காவலருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று சென்று இறந்து போன பெண் தலைமைக் காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு படை வீரர் செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும்,
குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க ஆணையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு தமிழக அமைச்சர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சி.சைலேந்திரபாபு, இகா.ப, 
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இகாப, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Exit mobile version