Home Uncategorized மீண்டும் வெளிநாடுகளில் ‘அண்ணாத்த’ ரஜினிகாந்த் ஆதிக்கம்

மீண்டும் வெளிநாடுகளில் ‘அண்ணாத்த’ ரஜினிகாந்த் ஆதிக்கம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த’ வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களிலே இருப்பதால், வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. 

இதுமட்டுமில்லாமல், ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை ‘அண்ணாத்த’ திரைப்படம் பெற்றுள்ளது.

Exit mobile version