இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா, கியாரா அத்வானி நடிப்பில், தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேசன்ஸ் சார்பில் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எஸ்விசி தயாரிப்பு நிறுவனத்தின் 50வது திரைப்படம் என்பதாலும், ராம்சரணின் 15வது படம் என்பதாலும் தற்காலிகமாக எஸ்விசி 50 ஆர்சி 15 என்று இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் அறிமுக விழாவில் ரன்வீர் சிங், சிரஞ்சீவி, ராஜமவுலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் கலந்துகொண்டனர். விழா முடிந்ததும் சிரஞ்சீவி க்ளாப் அடிக்க, ஷங்கர் ஆக்ஷன் சொல்ல, ராம் சரண் நடிக்க படப்பிடிப்புத் தொடங்கி வைக்கப்பட்டது. விழா முடிந்தபின் ஹைதராபாத்தில் உள்ள மிலிட்டரி ஹோட்டலில், விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இயக்குநர் சங்கர் விருந்தளித்தார். எஸ்விசி 50 திரைப்படத்தின் அறிமுக விழா தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
