Home Uncategorized தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழக ஆளுநர்  புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நாகாலாந்து ஆளுநராக இருந்து வருகிறார்.

பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இனி அவர் தொடர்ந்து அந்த மாநில பொறுப்பில் தொடருவார் என்றும் தமிழக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குடியரசு தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

இது தவிர ஓய்வு பெற்ற ராணுவ லெப்டிணன்ட் ஜெனரல் குர்மித் சிங்கை உத்தராகண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

அசாம் மாநில ஆளுநராக உள்ள ஜக்தீஷ் முகி, நாகாலாந்து மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசு தலைவர் தமது உத்தரவில் கூறியுள்ளார். உத்தராகண்ட் மாநில ஆளுநராக இருந்த பேபி ராணி மெளரியா சமீபத்தில் தமது பதவியை ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், அவரது ராஜிநாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version