வடபழனி கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நேத்திக்கு பொதுக்குழுக் கூட்டம் நடந்துச்சு.
இயக்குநர் சங்கத்தின் தற்போதைய உறுப்பினர்கள் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மூன்று ஆண்டு பதவிக்கான தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.இதனையொட்டி கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயக்குநர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதை எல்லாம் தாண்டி இயக்குநர் இமயம் பாராட்டி , புகழ்ந்து கையெடுத்து கும்பிட்ட ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், ரிலீஸாகும் படங்கள் குறித்து தவறான விமர்சனம் செய்தால் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் ஹைலைட்
