Home Uncategorized ஜே. அலெக்சாண்டர் எனும் பெயருடை இயக்குநர் மகேந்திரன் … தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத...

ஜே. அலெக்சாண்டர் எனும் பெயருடை இயக்குநர் மகேந்திரன் … தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குநர்

மரபைப் பிடித்துக் கொண்டு ஒரே நேர்க்கோட்டில் பயணித்துக் கொண்டிருந்த சினிமாவில் பாலச்சந்தருக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பாராத பல புதுமைகளைப் புகுத்தி அதை மக்களை ஏற்கும்படி பக்குவமாக படம் எடுத்தவர் தான் மகேந்திரன்.

ஒரே மாதிரியான ரஜினியின் நடிப்பை மாற்றி தற்போது இருக்கும் ஸ்டைலான ரஜினியை முள்ளும் மலரும் ,ஜானி.. போன்ற திரைப்படங்களினூடாக நமக்குக் காட்டியவர் அவர் தான். இன்னும் நிறைய சாதனைகள் புரிந்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் மீட்பர்,  ஒரு உன்னதக் கலைஞன் என்றே சொல்லலாம். 

70 களுக்குப் பிறகு தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக பொலிவையும் வீரியத்தையும் இழந்து கொண்டிருந்த சமயங்களில் தமிழ் சினிமாவின் தன்னுடைய எதார்த்தமான கதைகளின் மூலம் மீட்டெடுத்து தமிழ் சினிமாவுக்கு உயிர் கொடுத்த உண்மைத் தமிழ்க் கலைஞன்  உதிரிப்பூக்களாய் இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார்.

1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள்  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, தமிழ்நாட்டில்.. இவருடைய தந்தையின் பெயர் ஜோசப் செல்லையா. தாயின் பெயர் மனோன்மணி. அவருடைய தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு இவருடைய பெற்றோர்கள் வைத்த பெயர் அலெக்சாண்டர்.

தன் சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை முடித்த இவர் பியூசியை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் அதன்பின் பொருளாதாரத்தில் இளநிலை பட்டப்படிப்பை அழகப்பா பல்கலைக் கழகக் கல்லூரியிலும் படித்தார்.

தன்னுடைய கல்லூரிக் காலங்களிலேயே மேடை நாடகங்களில் மிகவும் ஆர்வ கொண்டிருந்தார் மகேந்திரன்.  அப்படி ஒருமுறை இவருடைய கல்லூரி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழா மேடையில் கல்ச்சுரல் செக்ரட்டரி என்பதால் மகேந்திரன் பேச அழைக்கப்பட்டார். 

அப்போது தமிழ் சினிமா வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிற நிலை பற்றியும் பழைய சினிமா முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அவர் பேசிய பேச்சில் எம்ஜிர் சொக்கிப் போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.  ஏனெனில் எம்ஜிஆரை பேச அழைத்தபோது அவர் மகேந்திரனை பாராட்டி மட்டும் வெகுநேரம் பேசியிருக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்து சென்னைக்கு சென்ற இவருக்கு சட்டம் பயில ஆசை. 

7 மாதம் வரை சட்டக் கல்லூரிக்குச் சென்ற இவர் பொருளாதார வசதியின்மை காரணமாக அதை தொடர முடியாமல்  சொந்த ஊருக்கு வந்த அவர் நண்பர் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பன் என்பவர் மூலம் இனமுழக்கம் என்னும் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராகப் பணிபுரிந்தார்.  
தொடர்ந்து துக்ளக் பத்திரிக்கையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.

மீண்டும் அவருக்கு எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனக்கு பொன்னியின் செல்வனை சினிமாவுக்கான கதையாக மாற்றும் ஆர்வம் இருப்பதை எம்ஜிஆரிடம் கூறினார் மகேந்திரன். அவருடைய வீட்டிலேயே தங்கி திரைக்கதை எழுதினார்.  அதற்கான பணிகள் தாமதமாகவே எம்ஜிஆர் மகேந்திரனை நாடகத்துக்கான கதைகளை எழுதும்படி சொன்னார். 

அப்போது அவர் எழுதிய கதைகள் அநாதைகள் என்பது. இந்த கதையைத் தழுவி திரைப்படம் எடுக்க எம்ஜிஆர் விரும்பினார். அந்த படத்தின் பெயர் தான் வாழ்வே வா… நடிகையர் திலகம் சாவித்ரியுடன் அவர் இணைந்து நடித்தது.

அதன்பின் எம்ஜிஆர் தான் நடிக்க ஆரம்பித்த காஞ்சித் தலைவன் எனும் படத்தின் இயக்குநரிடம் மகேந்திரனை உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்தார்.திரைக்கதை, வசனம் சொந்தமாக திரைக்கதை எழுதத் தொடங்கிய மகேந்திரன் அவர்கள் முதலில் எழுதிய நாம் மூவர் (1966) என்னும் படத்துக்குத் தான். 

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே பேனரின் கீழ் சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை போன்ற படங்களுக்கும் திரைக்கதை எழுதினார்.  அதன்பிறகு சிவாஜி கணேசன் படத்துக்கு திரைக்கதை எழுதும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படம் தான் சிவாஜி நடித்த நிறைகுடம் (1969).

சிறந்த கலைஞர்கள் பெரிதாக விருதுகளைத் தேடிப் போவதில்லை. மக்களுடைய அங்கீகாரம் தான் அவர்களுக்கான விருதுகள். அந்த வகையில் மகேந்திரனுக்கு நிறைய விருதுகள் எல்லாம் கிடைக்கவில்லை. 1979 ஆம் வருடம் சிறந்த திரைப்படத்துக்கான விருதை முள்ளும் மலரும் திரைப்படத்துக்காக பெற்றார். 

அதன்பின்  2017 ஆம் ஆண்டு IIFA வின் விருது விழாவில் சிறந்த வில்லனுக்கான விருதை விஜய் நடித்த தெறி படத்துக்கான பெற்றார். துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் தங்கப் பதக்கம் என்னும் நாடகத்துக்கு திரைக்கதை எழுதினார். 

அதை நடிகர் செந்தாமரை நாடகமாக பல ஊர்களில் திரையிட்ட போது, 46 ஆவது முறை திரையிடலின் போது அதைப் பார்க்க வந்திருநத சிவாஜி தன்னுடைய மூடிவிட்ட நாடக சபையை மீண்டும் திறந்து இந்த நாடகத்தை நான் போடுகிறேன் என்று சொல்லி நடித்தார். அதன்பிறகு அது படமாக மாற்றப்பட்டது.

இப்படி பத்திரிக்கையாளர், திரைக்கதை, வசனம் என்று இருந்த இவர் முதன்முதலாக இயக்குநர் அவதாரமெடுத்தது இன்றளவும் நம் மனதில் நீங்காமல் இருக்கிற முள்ளும் மலரும் தான்.  இதுவரைக்கும் பார்த்த ரஜினியில் இருந்து அவருக்குள் இருக்கும் ஸ்டைலான புது ரஜினிகாந்தை நமக்கும் ஏன் ரஜினிக்குமே காட்டிய அற்புதமான இயக்குநர்.இப்படி எதார்த்தமான படங்களை இவரைப் போல இன்றுவரை வேறு யாராலும் எடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு எதார்த்தமான படமாக அமைந்தது தான் உதிரிப்பூக்கள். 

Exit mobile version