முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் 3 வழக்குகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பூந்தமல்லி சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் ஒருவரை சட்டையை கழட்டி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 40 பேர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது நேற்று முன்தினம் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை ராயபுரம் காவல்நிலையத்தில் 188,269,270 IPC r/w 41b ஆகிய பிரிவுகளின் கீழ் கூடுதலாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தற்போது ஜெயக்குமாரை அழைத்துச் சென்றனர்
