Home சினிமா ‘ஜன நாயகன்’ திருவிழா! ரோஹிணி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம் உச்சம்!

‘ஜன நாயகன்’ திருவிழா! ரோஹிணி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம் உச்சம்!

சென்னை கோயம்பேடில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர்.

எச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தணிக்கை வாரிய தாமதங்கள் மற்றும் பல்வேறு சவால்களைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

திரையரங்கின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த விஜய்யின் ராட்சத கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்கள் முழங்க நடனமாடியும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பல மாத காத்திருப்புக்குப் பிறகு வெளியாகும் விஜய்யின் இந்தத் திரைப்படத்தைக் காண அதிகாலை முதலே திரையரங்க வளாகத்தில் பெருந்திரளான ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Exit mobile version