Home Uncategorized ஜப்பானிய மூளைக்காய்ச்சல் – தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் – தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. இதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மூளைக்காய்ச்சல் பரவி உள்ளது.  இந்த காய்ச்சலானது க்யுளெக்ஸ் என்ற அரிய வகை கொசு மூலம் பரவி வருகிறது. இந்த மூளைக்காய்ச்சல் ஜப்பானில் கண்டு பிடிக்கப்பட்டதால் இந்த காய்ச்சலுக்கு ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த காய்ச்சலால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 68 ஆயிரம் பேர் மரணம் அடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவீதம் பேர் மரணம் அடைவார்கள் என்றும், 30 சதவீதம் பேருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுவரை வடமாநிலங்களிலும், கிராம புறங்களிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திய மூளைக்காய்ச்சல் நோய் தற்போது தமிழகத்திலும் பரவி உள்ளது.

Exit mobile version