Home செய்திகள் நிதி ஆயோக் கூட்டத்தில் முதன்முறையாக ஜோசப் விஜய்!

நிதி ஆயோக் கூட்டத்தில் முதன்முறையாக ஜோசப் விஜய்!

புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாசார மையத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் மிக முக்கியமான 11-வது நிர்வாகக் குழுக் கூட்டம் (NITI Aayog Governing Council Meeting) இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கொள்கை முடிவுகளை விவாதிக்கும் இந்த உயர்நிலைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதன்முறையாகத் தனது மாநிலக் குழுவினருடன் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்றுள்ளார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், முக்கியத் தொழிற்துறை வழித்தடங்களுக்கான மத்திய அரசின் நிதிப் பங்கீட்டை அதிகரித்தல் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு பெருந்திட்டங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடுகளைத் தாமதமின்றி வழங்க வேண்டியதன் அவசியத்தை முதலமைச்சர் விஜய் மிக அழுத்தமாக வலியுறுத்த உள்ளார்.

மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பது மற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது உள்ளிட்ட மாநிலத்தின் மிக முக்கிய வாழ்வாதாரக் கோரிக்கைகளையும், பிராந்தியத் தேவைகளையும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றுக்கான உரிய தீர்வுகளைப் பெறுவதற்கு இந்த டெல்லி உச்சிமாநாடு ஒரு மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version