தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) உயர்த்தியுள்ளது.
சென்னை உள்வட்டச் சாலையில் உள்ள மாத்தூர், கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கங்கராம்பாளையம் மற்றும் மொரட்டாண்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள செலியமேடு ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுங்கக் கட்டணச் சீரமைப்பின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கார்கள், வணிக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களின் ஒருவழிப் பயணம், இருவழிப் பயணம் மற்றும் மாதாந்திர பாஸ்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
