Home Uncategorized காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு இரு சக்கர ரோந்து வாகனத்தை துவக்கி...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு இரு சக்கர ரோந்து வாகனத்தை துவக்கி வைத்தார் 

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தினை சீராக இருக்கும்பொருட்டும் பொன்னேரிக்கரையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலும் , அதேபோல் பெரியார் நகர் முதல் மூங்கில் மண்டபம் வரை இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலைகளில் தன்னிச்சையாக நிறுத்துவதை தடுப்பதற்காக புதிய இரு சக்கர இரண்டு போக்குவரத்து ரோந்து வாகனங்களை  ( 05.08.2021 ) காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து துவக்கி  வைத்தார். 

மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தினார் 

Exit mobile version