வெளியானது நடிகர் கார்த்தியின் ‘மெய்யழகன்’ டிரெய்லர்..!
பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’. சூர்யா – ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
கார்த்தியின் 27வது படமான இதில், அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இபபடத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதில், இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

