உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்க்கல்வி திட்டத்தில் பயன்பெறுவர். கல்லூரி வாயிலாகவோ அல்லது www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ மாணவிகள் நேரடியாக பதிவு செய்யலாம்.
