Tuesday, March 10, 2026
HomeUncategorizedதேரழுந்தூர் கம்பர் கழகம் - இரண்டாம் நாள்

தேரழுந்தூர் கம்பர் கழகம் – இரண்டாம் நாள்

தேரழுந்தூர் கம்பர் கழகம் – புதுக்கோட்டை கம்பன் கழகம் ஆகிய இரு கழகங்களின் சார்பில் நடைபெறும் தேரழுந்தூர்  “கம்பன் விழா” வின்   இரண்டாம் நாள் (08/01/2023) காலைப்பொழுது  நிகழ்ச்சிகளின் முதல்  பிரிவு “கம்பன் கவி இசைச்செல்வன் ஆ.ராமபத்திரன் அரங்க”த்தில் காலை 9.30 மணியளவில்  செல்வி.சி.பா.சாய் விபிஷ்காவின் கம்பன் இசை மற்றும்  திரு.முத்து நடராஜன் வரவேற்புரையுடன்  தொடங்கியது.

இராமேஸ்வரம் கம்பன் கழகத்தலைவர் த திரு.கி. முரளிதரன் அவர்களின் தலைமையேற்க, இராமேஸ்வரம் கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.கோடூர்.  இரமணி சாஸ்திரிகள், இராமேஸ்வரம் கம்பன் செயலாளர் திரு. ந. நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில், தமிழக அரசின் “தமிழ்ச்செம்மல் விருது” பெற்ற மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான ஜெனிபர்.ச.பவுல்ராஜ் அவர்களும்,  மரம் வளர்ப்பில் சாதனையாளரான “பசுமை நாயகன்”  வனம். திரு.கலைமணி மற்றும் அவருடன் ஒத்துழைத்துவரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் மேடையிலிருந்த  அவையோரால் பாராட்டப் பெற்றனர். 

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் பிரிவு நிகழ்ச்சியாக, எழுத்தாளர், பெங்களூரு கம்பன்  இலக்கிய ஆராய்ச்சியாளர் திரு.ஜடாயு, தஞ்சாவூர் கம்பன் கழக துணைத்தலைவர். முனைவர்.திரு. இரா.கலியபெருமாள், தேரழுந்தூர் க.கோஸகன் ஆகியோர் கம்பனின் புகழுக்கு புகழ் சேர்க்க “நற்றமிழ் முற்றம்” களத்தில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். 
நன்றியுரையை திரு. ஜானகி ராமன் அவர்கள் நன்றி கூறினார். இதன்பின் மதிய விருந்துடன் காலை நிகழ்வுகள் நிறைவுற்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments