Home Uncategorized “கம்பன் விழா” – முதல்நாள் நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றன. 

“கம்பன் விழா” – முதல்நாள் நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றன. 

தேரழுந்தூர் கம்பர் கழகம் – புதுக்கோட்டை கம்பன் கழகம் ஆகிய இரு கழகங்களின் சார்பில் நடைபெறும் தேரழுந்தூர்  “கம்பன் விழா” வின்   முதல்நாள் (07/01/2023) நிகழ்ச்சியின் அடுத்த  அடுத்த இருபிரிவுகளாக வாகீச கலாநிதி கி.வா.ஜெகநாதன் அரங்கத்தில் மாலை 5 மணிக்கு பள்ளி மாணவியர் குழுவின் பக்திப் பாடலுடன் இனிதே தொடங்கியது.

பின் கம்பனின் பெருமைகள் பற்றி சிற்றுரை மற்றும் கவிதைகள் படைத்து  பள்ளி  மாணவ, மாணவியர் தங்கள் தமிழ்ப்பற்றினை திறம்பட வெளிப்படுத்தி வியக்க வைத்தனர். செல்வி.மு.க.தனுஸ்ரீ யின் தமிழிசையைத் தொடர்ந்து,  நிகழ்ச்சியின் வரவேற்புரையை ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு.ஆ.முத்துக்குமார் அவர்கள்  நிகழ்த்த, புதுச்சேரி முன்னாள் சட்டசபையின் சபாநாயகரும், புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் திரு.வே.பொ.சிவக்கொழுந்து அவர்கள் தலைமையில், புதுக்கோட்டை கம்பன் கழக துணைத்தலைவர்கள் எம்.ஆர். முருகப்பன்,  அருண் சின்னப்பன் ஆகியோர் முன்னிலையில்,  திரு. ஆமருவி தேவநாதன் அவர்கள் எழுதிய”நான் இராமானுசன்” , திரு.ஜடாயு அவர்கள் எழுதிய  “கம்ப ராமாயணம் -66 ஆகிய நூல்களை வெளியிட்டு, சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் திரு.ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியின் சிறப்புகளை புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளர் திரு.இரா.சம்பத் குமார் அவர்கள் குறிப்பிட்டு சுருக்கவுரை வழங்க, இதனைத் தொடர்ந்து  திரு. ஆமருவி தேவநாதன், திரு.ஜடாயு ஆகியோர் ஏற்புரையாற்ற,  திரு. பொ.இராஜசேகரன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுற்றது. இதன்பின்  இலக்கியச்சுடர். வழக்கறிஞர். திரு. த.ராமலிங்கம் அவர்கள்  நடுவராகப் பொறுப்பேற்க, “தலைவனைக் காட்டிலும் தொண்டனை உயர்த்திப்பிடித்த கம்பனின் செயல் நியாயம் அன்று” என, “திருச்சி நகைச்சுவை மன்ற”த்தின் செயலாளர் திரு.க. சிவகுருநாதன் அவர்கள் வழக்கு தொடுக்க,  அதனை மறுக்கும் விதமாக “திருச்சி கம்பன் கழக செயலாளர்  முனைவர். திரு. இராதாகிருஷ்ணன் மாது” அவர்கள் வாதிட்டார்.

      ” திரு.மு. முகமது ரபீக்” அவர்களின் நன்றியுரையுடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றன. 

Exit mobile version