Home Uncategorized கன்னியாகுமரியில் நாளை ராகுல்காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார்.

கன்னியாகுமரியில் நாளை ராகுல்காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார்.

கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார் ராகுல்காந்தி. அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி.

இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை தொடங்குகிறார். ராகுல் காந்தியின் புரட்சி பயணம் வெற்றி பெற முரசொலி நாளேடு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Exit mobile version