தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை செல்ல உள்ளார்.
நாளை மதியம் கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர்.
ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கி வைத்து விட்டு, அன்றைய தினமே முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை புறப்பட்டு செல்கிறார்.
இதன்பின் மதுரை செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
