Home செய்திகள் கண்ணூர் மாணவர் நிதின் ராஜ் மரணம்: சாதி பாகுபாட்டுக்கு எதிராக கேரளா முழு அடைப்பு போராட்டம்!

கண்ணூர் மாணவர் நிதின் ராஜ் மரணம்: சாதி பாகுபாட்டுக்கு எதிராக கேரளா முழு அடைப்பு போராட்டம்!

கண்ணூர் அரசு பல்மருத்துவக் கல்லூரி மாணவர் நிதின் ராஜ், சாதிய ரீதியிலான பாகுபாடு மற்றும் பேராசிரியர்களின் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் கேரளா முழுவதும் இன்று முழு அடைப்பு (Hartal) போராட்டம் நடைபெற்றது.

உயிரிழந்த மாணவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களில் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தால் மாநிலத்தின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், மாணவர் நிதின் ராஜின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version