ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில், வங்கியின் பிடிவாதமான போக்கால் உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது சகோதரர் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பிந்து நாயக் என்ற முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது வங்கிக் கணக்கில் இருந்த 20,000 ரூபாய் சேமிப்பை எடுக்க அவரது சகோதரர் அஜித்குமார் வங்கி அதிகாரிகளை அணுகியுள்ளார்.
ஆனால், அதிகாரிகள் அந்தப் பெண் நேரில் வந்தால்தான் பணம் தரப்படும் என்று கறாராக மறுத்துவிட்டதால், மனவேதனையடைந்த அஜித்குமார், புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து எலும்புக்கூடாக ஒரு மூட்டையில் கட்டி வங்கி வாசலுக்கே கொண்டு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வங்கியின் மனிதாபிமானமற்ற செயல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
