குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்ததாக தகவல்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், பிபின் ராவத்-ன் நிலை குறித்து தெரியவில்லை.
கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து வேலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல்.
குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் சுமார் 1 மணி நேரமாக எரிகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ, கோவையில் இருந்து மருத்துவர்கள் குன்னூருக்கு விரைந்துள்ளனர்.
