Thursday, April 30, 2026
HomeUncategorizedகூட்டணி வேறு, கொள்கை வேறு. சந்தர்ப்ப சூழலுக்கேற்ப கூட்டணி மாறும்” - இபிஎஸ்

கூட்டணி வேறு, கொள்கை வேறு. சந்தர்ப்ப சூழலுக்கேற்ப கூட்டணி மாறும்” – இபிஎஸ்

தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தோம்.

தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

மக்கள் பிரச்னைகளுக்காக மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது.

தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சு நடக்கும். இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம்.

தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும். டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.

இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டையும் எடுத்துரைத்தோம். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக கேட்டுக்கொண்டார் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments