Home Uncategorized கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும் உறுப்பினர்  அல்லாதவர்களையும்  உறுப்பினர்களாக சேர்த்து பயிர்க்கடன் வழங்கப்படும் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க கூடிய அரிசி, சீனி, கோதுமை உட்பட  அனைத்து பொருட்களும் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்குவது தான் முதல்வரின் கொள்கை அவரது கொள்கை  நிறைவேற்றப்பட்டு வருகிறது. கொரோனா நிவாரண நிதி முதல்கட்ட தவணை 99.9% வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன பொதுமக்களுக்கும் அந்தத் தொகை வழங்கப்படும் அதேபோல் இன்று முதல் இரண்டாம் கட்ட தவணை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Exit mobile version