தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று (செப்டம்பர் 26) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வைத்து முக்கிய தெருக்கள் வழியாக கொடி ஊர்வலம் சென்றது.
கொடிபட்டம் கோயிலுக்கு வந்ததும், காலை 9 மணிக்கு கோயில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனால் அங்கு தசரா திருவிழா களைகட்டியுள்ளது.
