Home Uncategorized லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த சார்பதிவாளரின்  சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த சார்பதிவாளரின்  சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த சார்பதிவாளரின்  சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

திருச்சி  மாவட்டத்தில்   1989   முதல் 1993 ஆம் ஆண்டு வரை  சார்பதிவாளராக பணியாற்றிய ஜானகிராமன் என்பவர் அவர் பெயரிலும் அவரது மனைவி வசந்தி பெயரிலும்  பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளார்.

திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 அந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில்  ஜானகிராமன்(79)  அவரது மனைவி வசந்தி(65) ஆகியோருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

ஜானகிராமன்,  அவரது மனைவி வசந்தி  பெயரில்  உள்ள சொத்துக்களின்  மதிப்பு சுமார் நூறு கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது

Exit mobile version