Home Uncategorized மாணவர் கல்லூரிகளில் சேர்க்கை எப்போது? -அமைச்சர் பொன்முடி பதில்

மாணவர் கல்லூரிகளில் சேர்க்கை எப்போது? -அமைச்சர் பொன்முடி பதில்

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும். 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
 
பல்கலைக்கழகங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான முறையை கடைப்பிடிக்க வேண்டும். பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும். அனைத்து பல்கலைக் கழகங்களிலும் எம்.பில். படிப்பை தொடர்ந்து நடத்தவேண்டும். அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும்.

இவ்வாறு பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

Exit mobile version