செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
பொருள் :
செம்மை நிற கண்களை உடைய தலைவனாகிய சிவ பெருமான், தேவர்கள், மனிதர்கள் என பாரபட்சமின்றி அனைவரின் மீதும் அன்பு காட்டி, அருள் செய்யக் கூடியவர். இவருக்கு தான் தருவேன், அவருக்கு தான் தருவேன் என யாரையும் அவர் ஒதுக்குவதில்லை. வேறு எந்த உயிருக்கும் இல்லாத சிறப்பாக நம்முடைய குறைகள், தவறுகள் அனைத்தையும் மன்னித்து, நம்முடைய இல்லங்கள் தோறும் எழுந்தருளி, செந்நிற தாமரை போன்ற அழகிய திருவடிகளை காட்டி நமக்கு அருள் செய்யக் கூடியவர்.
