Home Uncategorized மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம்: கோலிவுட்டில் வெடித்து சிதறிய லவ் – கர்ப்ப...

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம்: கோலிவுட்டில் வெடித்து சிதறிய லவ் – கர்ப்ப சர்ச்சை!

கோலிவுட் வட்டாரத்தில் தற்போது ஹாட் டாபிக்காக வலம் வரும் ஒரு செய்தி,  செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவைச் சுற்றியுள்ள மர்ம முடிச்சுகள் தான். அண்மைக்காலமாகத் திரையுலகப் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் தனது சுவையான சமையலால் அசத்தி வரும் மாதம்பட்டி ரங்கராஜ், விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார்..

அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை பரவலாகப் பேசப்படாத நிலையில், திடீரென வெடித்திருக்கும் இந்த விவகாரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

 மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவி இருப்பதும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த புதிய  தகவல் தான் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் பரபரப்பாகியுள்ளது.

திரைப்படங்களில்  காஸ்ட்யூம் டிசைனரா  இருக்ரும் ஜாய் கிரிசில்டா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், தானும் மாதம்பட்டி ரங்கராஜும் திருமணம் செஞ்சுடதாகவும், மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்!

அண்மைக்காலமாக, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்த ஜாய் கிரிசில்டா, இப்போது இந்த bombshell அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இங்கு ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்: இந்த ஜாய் கிரிசில்டாவுக்கு 2018 ஆம் ஆண்டு ‘பொன்மகள் வந்தாள்’ பட  டைரக்டர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் உடன்  மேரேஜ்  நடந்துச்சு, பின்னர் வழக்கம் போல்  டைவோர்ஸூம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது திடீரென மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் ஆகிவிட்டதென்றும், கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருப்பதன் பின்னணியில் பெரும் சர்ச்சைகள் இருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுகின்றனர்.

அதாவது ஒய்ஃப்போடு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிஞ்சிருந்த மாதம்பட்டி ரங்கராஜும், கணவரை  டைவோர்ஸ் செய்த ஜாய் கிரிசில்டாவும் பொது விருந்துகளில் சந்தித்துக்கொள்ளும் பொது பழக்கம் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

அதன் விளைவாக, ஜாய் கிரிசில்டா  கர்ப்பம் ஆகியுள்ளார்.

Mathampatty Rangaraj

அதுனாலே,  மேரேஜ் செய்துகொண்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்கோணுமுன்னு மாதம்பட்டி ரங்கராஜிடம் கேட்டிருக்கிறார் ஜாய் கிரிசில்டா. 

ஆனால், மாதம்பட்டி ரங்கராஜுக்கு அதில் விருப்பமில்லையாம். இதை நேரடியாக ஜாய் கிரிசில்டாவிடம் சொல்ல முடியாததால், “எனக்கும் என் மனைவிக்கும் முறைப்படி விவாகரத்து நடக்கலை. அதனால் இப்போது நாம் கல்யாணம் செய்துகொண்டோம் என்று அறிவிச்சா சட்டரீதியாகச் சிக்கல் வரும்” என்று சொல்லி, திருமண அறிவிப்பைத் தவிர்த்து வந்திருக்கிறாராம். 

இதை கேக்காததாலே, கொஞ்சம் கொஞ்சமாக ஜாய் கிரிசில்டாவை விட்டு விலகவும் தொடங்கிட்டாராம்.

இதைச் சற்றும் எதிர்பாராத ஜாய் கிரிசில்டா, அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, ரங்கராஜிடம் இருந்து எந்த பதிலும் இல்லையாம்.

அதனால், அவருக்குத் தெரிந்தவர்களிடம் விசாரிக்கும் போது ” அட,, ஏம்மா அவனுக்கு இதுதான் வேலையே? ஒரு பெண்ணுடன் சில காலம் பழகுவான், பிறகு அந்தப் பெண்ணை விட்டுவிட்டு வேறு பெண்ணைத் தேடிப் போய்விடுவான்” என்று சில அதிர்ச்சித் தகவல்கள் அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியான ஜாய் கிரிசில்டா, அவரை விட்டு விலக மனமில்லை என்பதாலும், அவரை நம்பி குழந்தையைச் சுமந்து கொண்டிருப்பதாலும், அதைத் தாமே பொதுவெளியில் சொல்லிவிடுவது என்று முடிவெடுத்து வெளியிட்டுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

இவர்களது திருமண புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
 

Exit mobile version