Home Uncategorized மீண்டும் களத்தில் இறங்கும் வடிவேலு!  எனக்கு எண்டே கிடையாது வடிவேலு பேட்டி!

மீண்டும் களத்தில் இறங்கும் வடிவேலு!  எனக்கு எண்டே கிடையாது வடிவேலு பேட்டி!

இயக்குநர் சுராஜ் – வடிவேலு இணையும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடிவேலு மிக நகைச்சுவையுடன் பேசினார். 

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சில துளிகள்….

அதில்,”இந்த மாதிரி துன்பத்தை வேறு யாருமே அனுபவிக்க முடியாது. எல்லாரும் வைகைப் புயல், வைகைப் புயல் என்று சொல்கிறார்கள். என் வாழ்க்கையில் இடையில் ஒரு சூறாவளிப் புயலே அடித்துவிட்டது. 

கொரோனா என்ற கொடிய நோய் வந்து தம்பியை அண்ணன் பார்க்க முடியல, தாயை மகன் பார்க்க முடியல, மனைவியை புருஷன் பார்க்க முடியல, பிள்ளையை அப்பா – அம்மா பார்க்க முடியல. குடும்பத்தினர் யாராவது இறந்துவிட்டால் வெளிநாட்டிலிருந்து வருவதற்கு விசா கூட கிடைக்கவில்லை என்றார். 

கொரோனா என்ற பிரச்சினை உலக அளவில் அனைவரையும் பயமுறுத்தி, அச்சுறுத்தி மிரள வைத்துவிட்டது. உலக மக்களைத் தூக்கமில்லாமல் ஆக்கிவிட்டது என்றார். 

Exit mobile version