Home Uncategorized தொடர் கனமழை – இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை – இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவாரூர், கரூர், திருப்பத்தூர், வேலூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version