Wednesday, March 11, 2026
HomeUncategorizedமிர்ச்சி சிவா நடிக்கும் "இடியட்"

மிர்ச்சி சிவா நடிக்கும் “இடியட்”

லொள்ளு சபா ராம்பாலா சந்தானத்தின் ’தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநரானார். தற்போது நடிகர் சிவாவை வைத்து இடியட் என்ற படத்தை எடுத்துள்ளார். 

இதில், மிர்ச்சி சிவாவும், நிக்கி கல்ராணியும் நடித்துள்ளனர். 2020 அக்டோபர் 24-ம் தேதி இடியட்டின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அதில் இவர்கள் இருவரும் ஒரு பேயை கட்டி தூக்கிச் செல்வது போல் புகைப்படம் வெளியிட்டிருந்தனர். நேற்று வெளியிட்ட விளம்பரத்தில் சிம்மாசனத்தில் சிவாவும், நிக்கி கல்ராணியும் அமர்ந்திருக்க, இரு பேய்கள் கவரி வீசுகின்றன. இந்தப் புகைப்படங்களிலிருந்து இதுவொரு பேய் ஸ்பூஃப் திரைப்படம் என்பது உறுதியாகிறது. 

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் இடியட்டை தயாரித்துள்ளது. படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments