தமிழகத்தின் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி இன்று காலை பதவியேற்க உள்ள சூழலில், அதற்கு முன்னோடியாக தமிழக காவல் துறையின் மிக முக்கிய உயர் பொறுப்புகளில் இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த.மனிவாசன் (K.Manivasan) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இதுவரை தமிழக காவல் துறை தலைமை இயக்குநராகவும் (DGP / Head of Police Force) பொறுப்பு வகித்த டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், ஐபிஎஸ் (Dr. Sandeep Rai Rathore, IPS), தற்போது சென்னை சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் இயக்குநராக (Director General of Prisons and Correctional Services) மாற்றப்பட்டுள்ளார்.
இதற்காக அந்த கூடுதல் டிஜிபி அந்தஸ்திலான பதவி, டிஜிபி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இதுவரை சிறைத்துறை இயக்குநராகப் பொறுப்பு வகித்த திரு. கே. சங்கர், ஐபிஎஸ் (Thiru K. Shankar, IPS), தற்போது சென்னையில் காலியாக உள்ள அமலாக்கப் பிரிவு சிஐடி (Enforcement Bureau CID) கூடுதல் காவல் துறை இயக்குநராக (ADGP) நியமிக்கப்பட்டு புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி பொறுப்பேற்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த உயர் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

