Friday, June 12, 2026
Homeசெய்திகள்முதல்வன் பட ஸ்டைலில் முதல்வருக்கு மனு அளிக்க புதிய புகார் பெட்டி!

முதல்வன் பட ஸ்டைலில் முதல்வருக்கு மனு அளிக்க புதிய புகார் பெட்டி!

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவிற்குத் தினந்தோறும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிக்கவும் ஏதுவாகத் தலைமைச் செயலக வெளி வளாக நுழைவாயில் பகுதியிலேயே ஒரு பிரத்யேகப் புகார் மனுப் பெட்டி புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வரும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், விரைவாக மனுக்களைப் பெற்று உரியத் துறைகளுக்கு அனுப்பி வைக்கவும் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தின் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டுப் பெறுவதில் உள்ள காலதாமதத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளதாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments