Home Uncategorized மழை எதிரொலி- சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

மழை எதிரொலி- சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

சென்னையில் நேற்று நண்பகல் முதல் மழை பெய்தது. தொடர்ந்து நாள் முழுவதும் கனமழை பெய்தது. மேலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.  இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கனமழை எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறையை அறிவித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இதுதவிர மேலும், 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Exit mobile version