சென்னையில் நேற்று நண்பகல் முதல் மழை பெய்தது. தொடர்ந்து நாள் முழுவதும் கனமழை பெய்தது. மேலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறையை அறிவித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதுதவிர மேலும், 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

