மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
எனினும் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் மதுரை ஆதீனம் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரதுமறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
