Home Uncategorized மதுரையிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக முன்பதிவில்லாத ரயில் சேவை

மதுரையிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக முன்பதிவில்லாத ரயில் சேவை

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு இயக்கப்பட இருக்கிறது. 

 மதுரை – தாம்பரம் முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06100) மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு 07.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 

முன்னதாக இந்த ரயில்  (06099) சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 06.30 மணிக்கு மதுரை வந்து சேரும். 

இந்த ரயில்கள் சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும்.

Exit mobile version